Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

பவானிசாகர் அணை நீர்மட்டம் 55 அடியாக உயர்வு

பவானிசாகர் அணை நீர்மட்டம் 55 அடியாக உயர்வு

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் 155 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது

பகிரவும் WhatsApp Facebook

நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த கன மழையால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 4877 கன அடியாக அதிகரித்ததால் நீர்மட்டம் 53 அடியில் இருந்து 55 அடியாக உயர்ந்தது.


ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடந்த இரண்டு நாட்களாக நீலகிரி மலைப் பகுதி மற்றும் கேரளாவில் கனமழை பெய்து வருவதால் அணைக்கு வந்து சேரும் பவானி ஆறு மற்றும் மாயாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. 


நேற்று நீர் வரத்து 2378 கன அடியாக இருந்த நிலையில், இன்று காலை நீர் வரத்து 4877 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 53 அடியில் இருந்து 55.34 அடியாகவும் நீர் இருப்பு 5.84 டி.எம்.சியாக உயர்ந்துள்ளது.

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் 155 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பாசனப் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

முந்தைய செய்தி
ஐந்தாவது ஆண்டாக நீடிக்கும் போர்! வீரர்கள் பற்றாக்குறையில் உக்ரைன்
அடுத்த செய்தி
China nominates health official to lead WHO

தொடர்புடைய செய்திகள்